anrvosauk

  • Home
  • Author: anrvosauk

தரம் 01 மாணவர்களால் கால்கோள் விழா நாளில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. 

தரம் 01 மாணவர்களால் கால்கோள் விழா நாளில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. இதில் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திருமதி தமனிகை பிரதாபன் அவர்கள் கலந்து கொண்டார். 
Read more

பாடசாலையின் தரம் 11 வகுப்பைறையை பழைய மாணவர் ஒருவர் தனது செலவில் வர்ணம் பூசி அழகு படுத்தி மாணவர்களிடம் கொடுத்துள்ளார்.

பாடசாலையின் தரம் 11 வகுப்பைறையை ஜெர்மனி நாட்டில் வாழும் பழைய மாணவர் ஒருவர் தனது செலவில் வர்ணம் பூசி அழகு படுத்தி மாணவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த உதவியை வழங்கிய அன்புள்ளத்துக்கு எமது மனம் நிறை நன்றிகள்..
Read more

எமது பாடசாலை மாணவர்களின் வகுப்பறை பயன்பாட்டுக்கு ஏற்ற ஒலிபெருக்கி சாதனம் ரூபா 30000 பெறுமதியில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க எமது பாடசாலை மாணவர்களின் வகுப்பறை பயன்பாட்டுக்கு ஏற்ற ஒலிபெருக்கி சாதனம் ரூபா 30000 பெறுமதியில் கனடா நாட்டில் இருந்து திருமதி சிவப்பிரியா ஸ்ரீதரன் (O/L 1998 பழைய மாணவி )அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவருடைய தாயாருடன் பிரித்தானியா பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி தமனிகை பிரதாபனும் இணைந்து அதிபர் ஆசிரியர்களிடம் கையளித்தனர்.
Read more

பாவனையில்  உள்ள பாண்ட் வாத்திய இசை கருவிகளில் பழுதடைந்தவற்றை புதிதாக வாங்குவதற்க்கு தேவையான நிதி ரூபா 115000.00 இணை திருமதி மதுராம்பிக்கை நவநீதன்வழங்கி இருந்தார்.

எமது பாடசாலை மாணவர்களின் பாவனையில்  உள்ள பாண்ட் வாத்திய இசை கருவிகளில் பழுதடைந்தவற்றை பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க  புதிதாக வாங்குவதற்க்கு தேவையான நிதி ரூபா 115000.00 இணை பிரான்ஸ் நாட்டில் இருந்து திருமதி மதுராம்பிக்கை நவநீதன்(பழைய மாணவி )வழங்கி இருந்தார். அந்த வாத்தியங்கள் பிரித்தானியா பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி தமனிகை பிரதாபனால் அதிபர் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது. நிதியை வழங்கி உதவிய மதுராம்பிகை அவர்களுக்கு மனம் நிறை நன்றிகள்.
Read more

தரம் 01 வகுப்பறை 1998 ஆம் அணி சாதாரணதர பழைய மாணவர்களின் நிதி ரூபா 300,000.00 இல் நவீன வசதிகளுடன் புனர் அமைக்கப்பட்டு பழைய மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

தரம் 01 வகுப்பறை 1998 ஆம் அணி சாதாரணதர பழைய மாணவர்களின் நிதி ரூபா 300,000.00 இல் நவீன வசதிகளுடன் புனர் அமைக்கப்பட்டு பழைய மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்துக்கு O/L 1998 பழைய மாணவர்கள் சார்பாக நிதி உதவி வழங்கிய பழைய மாணவர்கள் சுபாஷ், லதீபன், திலீபன் மூவருக்கும் மனம் நிறை நன்றிகள்.
Read more

பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

எமது பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து திருமதி ஞானபாலன்  வாசுகி அவர்களின் நிதி அன்பளிப்பில் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை வழங்கிய ஞா.வாசுகி அவர்களுக்கு எமது மனம் நிறை நன்றிகள்
Read more

மைதானத்தை சுற்றியுள்ள மதிலின் மேலாக பாதுகாப்புவேலி அமைத்து கொடுக்கபட்டது

பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைய மைதானத்தை சுற்றியுள்ள மதிலின் மேலாக பாதுகாப்புவேலி பலலட்சம் ரூபா செலவில் எமது பாடசாலை பழைய மாணவனும் எமது பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் போசகருமான திரு வே சிவசுந்தரம் அவர்களால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Read more

13ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு இணைய வழிக்கல்விக்காக தொலைபேசியை வழங்கி வைப்பு

எமது பாடசாலையின் பழைய மாணவியாகிய K. தவராணி தனது மகளின் திருமண நாள்20.11.21(கபிலன் நிவேதிகா) ஞாபகார்த்தமாக 13ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு இணைய வழிக்கல்விக்காக தொலைபேசியை வழங்கி உள்ளார் நன்றிகள்.
Read more

தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டது

உலகளாவிய நோய்நிலை காரணமாக பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையினை கருத்திலெடுத்து திரு கிருபானந்தன் சண்முகதாஸ் அவர்கள் தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை வெவ்வேறுஇடங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான சந்தாப்பணம் முழுமையையும் பொறுப்பேற்று அதனை தனது அம்மம்மா அமரர் நாகம்மா ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளார். எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
Read more

மைதான அன்பளிப்பு

மைதானத்துக்கான காணியை வாங்குவதற்கான நிதி அன்பளிப்பு செய்தவர்களின் பெயர்களை தாங்கிய பெயர்ப்பலகை மைதானத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எமது பாடசாலைக்கு மைதானம் இல்லாமை பெரும் குறையாக இருந்த வேளையில் 1999 ஆம் ஆண்டு முன்னைநாள் அதிபர் மதிப்புக்குரிய திரு சு.முத்துக்குமாரசுவாமி அவர்களின் முயற்சியில் புலம்பெயர், குறிப்பாக லண்டன் வாழ் பழைய மாணவர்கள் மற்றும் தாயகத்தில் உள்ள பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளின் நிதி அனுசரணையில் முதல் பகுதி மைதானக்காணி வாங்கப்பட்டது. 2002இல் மீண்டும் ஒருபகுதி காணி வாங்கப்பட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. […]
Read more

No products in the cart.

X