anrvosauk

  • Home
  • Author: anrvosauk
  • Page 2

தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டது

உலகளாவிய நோய்நிலை காரணமாக பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையினை கருத்திலெடுத்து திரு கிருபானந்தன் சண்முகதாஸ் அவர்கள் தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை வெவ்வேறுஇடங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான சந்தாப்பணம் முழுமையையும் பொறுப்பேற்று அதனை தனது அம்மம்மா அமரர் நாகம்மா ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளார். எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
Read more

மைதான அன்பளிப்பு

மைதானத்துக்கான காணியை வாங்குவதற்கான நிதி அன்பளிப்பு செய்தவர்களின் பெயர்களை தாங்கிய பெயர்ப்பலகை மைதானத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எமது பாடசாலைக்கு மைதானம் இல்லாமை பெரும் குறையாக இருந்த வேளையில் 1999 ஆம் ஆண்டு முன்னைநாள் அதிபர் மதிப்புக்குரிய திரு சு.முத்துக்குமாரசுவாமி அவர்களின் முயற்சியில் புலம்பெயர், குறிப்பாக லண்டன் வாழ் பழைய மாணவர்கள் மற்றும் தாயகத்தில் உள்ள பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளின் நிதி அனுசரணையில் முதல் பகுதி மைதானக்காணி வாங்கப்பட்டது. 2002இல் மீண்டும் ஒருபகுதி காணி வாங்கப்பட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. […]
Read more

புல்லு வெட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் திரு தே.துளசிதாசன் ஆவரங்கால் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக தாய்ச்சங்கத்துடன் இணைந்து மைதான துப்பரவு பணிகளுக்காக புல்லு வெட்டும் இயந்திரம் ஒன்றை வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்.
Read more

சுவிஸ் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றியத்தால் தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

எமது பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைய சுவிஸ் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றியத்தால் ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியத்தின் ஊடாக தாய்ச் சங்கத்துடன் இணைந்து தளபாடங்கள் (ஆசிரியர் மேசை 06,அலுமாரி 05)அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதி அன்பளிப்புச் செய்த அனைத்து சுவிஸ் வாழ் உறவுகளுக்கும் ஒன்றியத்தினர்க்கும் நன்றி கூறி  வாழ்த்துகின்றோம்.
Read more

பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் பிரதி எடுக்கும் இயந்திம் வழங்கிவைப்பு.

கொரோனா இடர்நிலையில் பாடசாலை முழுமையாக மூடப்படடிருந்த வேளையில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வேறு வழிகளில் நடைபெற்றன. அவ்வேளையில் பாடசாலையில் பயன்பாட்டில் இருந்த பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo copy mechine&Printer) முழுமையாக செயலிழந்திருந்தது. அந்த இக்கடடான சூழலில் மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் பிரதி எடுக்கும் இயந்திரத்தை வாங்குவது என முடிவெடுத்தபோது எமது பாடசாலையின் பழைய மாணவரான திரு. கலாமோகன் அவர்கள் மனமுவந்து பல லட்ஷம் பெறுமதியில் பிரதி எடுக்கும் இயந்திரத்தை […]
Read more

தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு லண்டன் வாழ் பழைய மாணவர் ஒருவரால் வருடா வருடம் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு லண்டன் வாழ் பழைய மாணவர் ஒருவரால் வருடா வருடம் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடமும் பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் பழைய மாணவர் சங்கத்தினுடாக தாய்ச் சங்கத்தினர்க்கு அனுப்பிய நிதியை தாய் சங்க உறுப்பினர்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
Read more

அதிபரின் வேண்டுகோளை ஏற்று மைதானத்தின் உள்ளே சுத்திகரிக்கப்படட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது

அதிபரின் வேண்டுகோளை ஏற்று மைதானத்தின் உள்ளே சுத்திகரிக்கப்படட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திரு வே.சிவசுந்தரம் அண்ணாவுக்கு பழைய மாணவர் சங்கத்தின் அகம் நிறை நன்றிகள்.
Read more

பெண்கள் கரப்பந்தாட்ட அணியின் உடைக்கான நிதியினை வழங்கி உதவிய திருமதி மதுராம்பிகை நவநீதன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

பெண்கள் கரப்பந்தாட்ட அணியின் உடைக்கான நிதியினை பிரான்ஸ் நாட்டில் இருந்து வழங்கி உதவிய பழைய மாணவி திருமதி மதுராம்பிகை நவநீதன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
Read more

 இலட்சம் ரூபா செலவில் திறன் வகுப்பறை (Smart Class Room) அமைத்துக் கொடுக்கப்பட்டது.

பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலையின் பழைய மாணவரும் எமது சங்கத்தின் போசகருமான திரு வே. சிவசுந்தரம் அவர்களால் 3 இலட்சம் ரூபா செலவில் திறன் வகுப்பறை (Smart Class Room) அமைத்துக் கொடுக்கப்பட்டது.
Read more

எமது பாடசாலை அணிக்கான உடைகள் (Jessy )ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது

வடமாகாண  பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் எமது பாடசாலை அணிக்கான உடைகள் (Jessy )ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு எமது நன்றிகள்.எமது பாடசாலை வீ.ரர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Read more

No products in the cart.