கொரோனா இடர்நிலையில் பாடசாலை முழுமையாக மூடப்படடிருந்த வேளையில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வேறு வழிகளில் நடைபெற்றன. அவ்வேளையில் பாடசாலையில் பயன்பாட்டில் இருந்த பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo copy mechine&Printer) முழுமையாக செயலிழந்திருந்தது.
அந்த இக்கடடான சூழலில் மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் பிரதி எடுக்கும் இயந்திரத்தை வாங்குவது என முடிவெடுத்தபோது எமது பாடசாலையின் பழைய மாணவரான திரு. கலாமோகன் அவர்கள் மனமுவந்து பல லட்ஷம் பெறுமதியில் பிரதி எடுக்கும் இயந்திரத்தை வாங்கி பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பு செய்துள்ளார். திரு கலாமோகன் அவர்கள் பாடசாலையின் பல்வேறு அபிவிருத்தி வேலைகளிலும் அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றார்.அவருடைய சேவைகளை பாராட்டுவதுடன் நன்றியையும் கூறுகின்றோம்.
“காலம் அறிந்து செய்த நற்பணி “