Works

அகில இலங்கை சித்திரப்போட்டி – 2025

வலய மட்ட போட்டி முடிவுகள் வலயமட்ட சித்திர போட்டிகளில் இடங்களைப் பெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவச் செல்வங்களை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் இவர்கள் வெற்றிக்கு வழி காட்டிய எமது சித்திரபாட ஆசிரியர் திரு. ஜெயராஜசிங்கம் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தரம் 6, 7 தரம் 8, 9 தரம் 10, 11 தரம் 12, 13
Read more

விசேட கல்வி மாணவர்களது வலயமட்ட போட்டி முடிவுகள்

விசேட கல்வி மாணவர்களுக்கான வலய மட்ட சித்திரம், அழகியல் போட்டிகளில் வெற்றியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டுவதுடன், அவர்களை வழிகாட்டிய விசேடகல்வி ஆசிரியர்களான திருமதி. பிரேமினி இரத்தினகாந்தன், திருமதி லக்க்ஷனா மதன்ராஜ் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தனி நடனம் தனி இசை உறுப்பெழுத்து சொல்வதெழுதல்
Read more

திரு. வீரசிங்கம் ஸ்ரீதரன் அவர்களால் இரும்பு ஏணி அன்பளிப்பு செய்யப்பட்டமை

திரு. வீரசிங்கம் ஸ்ரீதரன் அவர்களுக்கு நன்றிகள் பாடசாலையின் தேவையை தானாக உணர்ந்த பெற்றோரான திரு. வீரசிங்கம் ஸ்ரீதரன் 9000/= பெறுமதியான இரும்பு ஏணி ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளார். இந்த ஏணியை அவரது இரு புதல்வர்களும் முறைப்படியாக கையளிப்பு செய்து வைத்தனர். இவருக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

கோப்பாய் பிரதேச பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டுகின்றோம். இவர்களுக்கு கடுமையான பயிற்சியை வழங்கிய விஞ்ஞான பாட ஆசிரியர்களான திருமதி. ருசேந்திரமணி சங்கரப்பிள்ளை, திருமதி.சந்திரா இளங்கோவன் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

விரைவு கணிதப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகள்

கோப்பாய் பிரதேச மட்டத்தில் நடைபெற்ற விரைவு கணிதப் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வி ப. அத்விகா தரம் 2, செல்வி. பா. மதுஷிகா தரம் 3 ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்களைப் பாராட்டுவதுடன் இவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களான திருமதி. செல்வரஞ்சனி, திருமதி. வாசுகி ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

DSI Cub கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணியினர்

DSI Cub கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள அணியினர். நேற்றைய தினம் (22.07.2025) எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான DSI Cub கரப்பந்தாட்ட போட்டியில் எமது பாடசாலையின் 13,15 பிரிவு அணியினர் மாவட்டச் சம்பியனாக வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். மேலும் 17,19 வயது பிரிவினர் இரண்டாம் இடங்களை பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். இந்த அடைவுகள் மூலம் எமது பாடசாலை கரப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் […]
Read more

மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை

கடந்த வெள்ளிக்கிழமை (18.06.2025) மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்ட 16,18 வயது பிரிவை சேர்ந்த மாணவர்கள் உரிய முறைப்படி பாடசாலையால் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்குரிய சான்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் விருந்தினராக யாழ் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கலந்து சிறப்பித்தார். விழாவை சிறப்பாக மேற்கொள்ள செயற்பட்ட எமது பாடசாலையைச் சேர்ந்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Read more

நாடகப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றியீட்டிய மாணவர்கள்

இலங்கை சுற்றாடல் அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதனை வழிப்படுத்திய ஆசிரியர் திரு ஐங்கரன் அவர்களுக்கும் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டித் தந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Read more

No products in the cart.