editor

  • Home
  • Author: editor
  • Page 6

புத்தூர் பொது நூலகம் நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய ஆரம்பப் பிரிவு மாணவர்கள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை புத்தூர் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பிரிவு 01 ( தரம் 1_ தரம் 2) இசைவும் அசைவும் – இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டனர். இப் போட்டியில் பங்குபற்றியவர்கள்: கதை கூறல் சித்திரம் வரைதல் பிரிவு 2( தரம்4,5) பொது அறிவு(எழுத்து மூலம்) தமிழ் சிங்கள ஆங்கில பரீட்சை
Read more

ஒட்டுச்சித்திரத்தில் வெற்றியீட்டிய மாணவர்கள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை புத்தூர் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்திய போட்டிகளில் ஒட்டுச்சித்திரத்தில் வெற்றியீட்டிய விசேட தேவையுடைய பிரிவு மாணவர்கள்:
Read more

கால்கோள் விழா 2025

2025ம் ஆண்டு தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவானது 30.01.2025 வியாழக்கிழமை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதமவிருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியான திருமதி கலைமதி வரதராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Read more

தமனிகை பிரதாபன் அவர்களின் அஞ்சலிக் கூட்டம்

05.02.2025 அன்று எமது பாடசாலையின் மறைந்த முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவி (பிரித்தானிய கிளை) தமனிகை பிரதாபன் அவர்களுக்கான அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பழைய மாணவர் தாய்ச்சங்க உப தலைவர் திரு. கமலகுமரன், போசகர் திரு. கமலநாதன், பொருளாளர் திரு. நந்தன், ஏனைய பழைய மாணவர் தாய்ச்சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திசங்க செயலாளர்,பொருளாளர், ஏனைய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மேல் வகுப்பு மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.
Read more

தரம் 05 புலமைபரிசில் பரீட்சை பெறுபெறுகள் 2024

சித்தி பெற்றோர்: சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு அரும்பாடுபட்டு உழைத்த வகுப்பாசிரியர் திரு. பாலேந்திரன் அவர்களுக்கும் உரிய மாணவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிப்பதுடன், ஒத்தாசை புரிந்த ஆரம்பக் கல்வி ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும், ஆரம்பக் கல்வி பகுதி தலைவருக்கும், மாணவர்களுக்கு போதுமான பயிற்சிகள், செயலட்டைகள், விசேட வகுப்புகள் போன்றவற்றை மேற்கொள்ள தொடர்ச்சியாக நிதி அனுசரணை வழங்கி வருகின்ற பழைய மாணவனும், பிரித்தானிய பழைய மாணவர் சங்க செயலாளருமான திரு. கிருபானந்தன் சண்முகதாஸ் அவர்களுக்கும் வேலைத் திட்டங்களை […]
Read more

மூன்றாம் தவணைப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை

திரு இ சிவஞான ராஜா மற்றும் பாடசாலை ஆசிரியர் திரு. அருண்குமார் அவர்களுக்கும் நன்றி கூறுகின்றோம். 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளை பெற்ற தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்றைய தினம் (24.01.2025) ஊக்குவிப்பாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்காக கிட்டத்தட்ட 60000/= வை இராசையா சிவபூரணி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அவரது மகன் இ. சிவஞான ராஜா மனம் உவந்து செலவு செய்துள்ளார். பாடசாலையுடன் […]
Read more

உயர்தர வகுப்பு மாணவர் ஓருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டமை

டென்மார்க்கில் வசிக்கும் நலன் விரும்பியான திரு. தியாகராஜா சாரங்கா அவர்களுக்கு நன்றிகள். பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க டென்மார்க்கில் வசிக்கும் எமது பாடசாலையின் நலன் விரும்பியான திரு. தியாகராஜா சாரங்கா அவர்கள் உதவி தேவைப்படும் உயர்தர வகுப்பு மாணவர் ஓருவருக்கு இன்றைய தினம் 42000/= பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கி உள்ளார். அத்துடன் உதவி தேவைப்படும் மற்றுமொரு மாணவருக்கு பத்து மாதங்களுக்கான தனியார் வகுப்பு கட்டணத்தை மாதாந்தம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இவ் அன்பருக்கும் , இவரிடம் […]
Read more

செயற்பாட்டறையின் கதவு, கண்ணாடியினை திருத்தம் செய்து தந்த ஜோகலக்ஷ்மி ஆசிரியருக்கு நன்றிகள்

தாய்ப் பழைய மாணவர் சங்க உறுப்பினரான திருமதி ஜோகலக்ஷ்மி ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள். எமது பாடசாலையில் நீண்ட காலமாக, திருத்தப்படாது இருந்த செயற்பாட்டறையின் கதவு, கண்ணாடி செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எமது பழைய மாணவர் சங்க உறுப்பினரான திருமதி. ஜோகலக்ஷ்மி ஆசிரியர் தனது நேரடி பார்வையில் 18000/=ஐ செலவு செய்துள்ளார். இவருக்கும் வேலைகளை தனது நேரத்தை செலவழித்து செய்வித்த விளையாட்டு பயிற்சியாளர் திரு க. நித்தியானந்தன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

அறிவிப்பு பலகையினை திருத்தம் செய்து தந்த கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள்

கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களான செல்வி. டினோஜா, அபர்ணா அவர்களுக்கு நன்றிகள். எமது பாடசாலையில் நீண்ட காலமாக அறிவிப்பு பலகையின் உடைந்த கண்ணாடி மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. இதற்காக பாடசாலையில் கடமையாற்றிய கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களான செல்வி. டினோஜா, அபர்ணா ஆகியோர் சிறு தொகையை நேரடியாக செலவு செய்து புதுப்பித்து தந்துள்ளனர். இவர்களுக்கும் வேலைகளை செய்வித்த விளையாட்டு பயிற்சியாளர் திரு க. நித்தியானந்தன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனியால் மூன்று மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டமை

சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி நிறுவனத்தினர் மற்றும் ஆசிரியர் செல்வி. அபர்ணா அவர்களுக்கும் நன்றிகள். பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி நிறுவனத்தினர் எமது பாடசாலையில் உதவி தேவைப்படும் மாணவர்கள் மூவருக்கு ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று துவிச்சக்கர வண்டிகளை நேற்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளனர். இந்நிறுவனத்தின் முகாமையாளர் ஏனைய உத்தியோகத்தர்கள், மாணவர்களின் உரிய வகுப்பு ஆசிரியர்கள், இந்நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த முன்னாள் பயிற்சி ஆசிரியர் செல்வி. அபர்ணா ஆகியோருக்கு பயன்பெற்ற […]
Read more

No products in the cart.