இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை காண்பதற்காக சென்ற மாணவர்கள்
யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை தரிசிப்பதற்காக கடந்த வாரம் சென்றிருந்தனர். இதில் எமது பாடசாலையைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவிகளான செல்வி. பிரதீபன் அபிநயா, செல்வி. கஜேந்திரன் சங்கீர்த்தனா ஆகியோரும் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை வழி நடத்திய எமது மாணவர் பாராளுமன்ற பொறுப்பு ஆசிரியர்களான திரு. ந. விஜயகுமார், திரு. வீ. விஜயகுமார் ஆகியோர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.










