தரம் ஐந்து புலமைப் பரிசில் 2026 மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் நடாத்தவும், வினா பத்திரங்கள், எழுது பொருட்களை கொள்வனவு செய்யவும், எமது பாடசாலையின் பழைய மாணவனும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய திரு கிருபானந்தன் சண்முகதாஸ் அவர்கள் வருடம் தோறும் நிதி அனுசரணை செய்து வருகின்றார்.
இந்த வகையில் இம்முறை 150000/= நிதியினை அன்பளிப்புச் செய்துள்ளார். இந் நிதி மூலம் பயன்பெறும் 2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகம் சார்பாகவும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
ANRV OSA UK
