தேசியமட்ட சாதனையாளர் செல்வி மோகன் பவதாரணி அவர்களின் கௌரவிப்பு நிகழ்வு

  • Home
  • Works
  • தேசியமட்ட சாதனையாளர் செல்வி மோகன் பவதாரணி அவர்களின் கௌரவிப்பு நிகழ்வு

10.09.2025 அன்று எமது பாடசாலையில் தேசியமட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது.

இதில் தேசிய மட்ட இசைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த செல்வி மோகன் பவதாரணி அவர்களையும், இவரை வழி நடத்திய எமது இசை ஆசிரியை திருமதி ஜனார்த்தனி பிரபாகரன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் மனப்பூர்வமாக கௌரவித்தது.

இந்நிகழ்வில் விருந்தினராக யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இரத்தினராசா கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடித்த அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மாணவி, ஆசிரியருக்கான பரிசில்களை வழங்கிய பழைய மாணவர் தாய்ச் சங்க நிர்வாகத்துக்கும், தேனீர் உபசரணையை வழங்கிய ஆசிரியர் கழக நிர்வாகத்திற்கும் பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Previous Post
Newer Post

Leave A Comment

No products in the cart.