இரண்டு மாணவர்கள் ஓரிரு புள்ளிகளில் வெட்டு புள்ளியை தவற விட்டமை கவலைக்குரிய விடயம்.
இச்சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்த மாணவச் செல்வங்களை பாராட்டுவதுடன் இதற்காக அயராது உழைத்த எமது தரம் 5 வகுப்பாசிரியர் திரு மூ பாலேந்திரன் அவர்களை பாராட்டுவதுடன் பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இணைந்து செயல்பட்ட ஆரம்பக் கல்வி பகுதித் தலைவர் திருமதி கௌசலா ராஜ்குமார் மற்றும் ஏனைய ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நுண்மதி வகுப்புகளை எடுத்து உதவிய ஆசிரியர் திரு சந்திரஹாசன் அவர்களுக்கும், நுண்மதி வகுப்புகளுக்கான கொடுப்பனவுகளையும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் ஒவ்வொரு வருடமும் வழங்கிக் கொண்டிருக்கும் இப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையின் செயலாளரும், பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு கிருபானந்தன் (நந்தன்) சண்முகதாஸ் அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

