தேசிய கலை இலக்கிய போட்டியில் இந்த வருடம் பாடல் நயத்தல் பிரிவில் எமது பாடசாலை மாணவி செல்வி மோ பவதாரணி தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய கலை இலக்கிய விருதைப் பெற தகுதி பெற்றுள்ளார்.
இம்மாணவியை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் தனது கடின உழைப்பால் இம்மாணவி தேசிய விருதை பெற்றுக் கொள்ள வழிகாட்டிய இசை ஆசிரியர் திருமதி. ஜனார்த்தனி பிரபாகரன் அவர்களையும் அதற்கு உறுதுணையாகவிருந்த ஆசிரியர் நிலானி பரநிரூபன் அவர்களையும் பாராட்டுவதுடன் பாடசாலைச் சமூகம் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது பாடசாலைக்கு நீண்ட கால இடைவெளியின் பின்னரான மிகப் பெரும் சாதனையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். மேலும் பல தேசிய விருதுகளை எமது மாணவர்கள் பெற்றுக் கொள்ள இம் மாணவியும் ஆசிரியரும் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் பாடசாலை சமூகமும் பெற்றோர்களும் பழையமாணவர்களும் பெருமகிழ்வு கொள்கின்றோம்.
