தேசிய கலை இலக்கியப் போட்டிக்காக பிரதேச மட்டத்தில் நடைபெற்ற பாடல் நயத்தல் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வி மோ.பவதாரணி முதலாம் இடத்தையும் செல்வன் த.ஜானுசன் இரண்டாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பாலர் பிரிவு கதை சொல்லுதல் போட்டியில் செல்வி ப. அத்விகா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இம் மாணவர்களை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் இவர்களை வழி நடத்திய இசை ஆசிரியர்களான திருமதி. ஜனார்த்தனி பிரபாகரன், செல்வி. சுதர்சினி வல்லிபுரம், வகுப்பாசிரியரான திருமதி. செல்வரஞ்சனி . சி ஆகியோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

