பாடசாலை அதிபராலும் மாணவர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் கணனி அறிவையும் விருத்தி செய்யும் நோக்குடன் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு தொகுதி கணனிகள் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக விடுமுறையில் தாய்நாடு சென்றிருந்த திரு திருமதி செந்தூரன் மற்றும் திரு திருமதி தணிகைக்குமரன் குடும்பத்தினர் இணைந்து தாய்ச் சங்க உறுப்பினர்களுடன் அதிபரிடமும் மாணவர்களிடமும் கணணிகளைக் கையளித்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் ஒரு தொகுதி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





